• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் தமிழர்கள் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பாராட்டு:

ByA.Tamilselvan

Apr 23, 2022

தமிழர்கள்மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,” தமிழகர்கள் மொழி அடையாளம் மிக்கவர்கள். மொழிக்காக முதலில் குரல் கொடுப்பவர்கள். தமிழகர்களின் மொழி, அடையாளம் பெருமைமிக்கது. சென்னை வழக்கறிஞர்கள் நீதிதுறை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றுகின்றனர். வழக்கறிஞர்கள் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பூர்த்தி செய்யும்.
200 காலியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் விரைந்து பரிந்துரைகளை அனுப்பும் என்று நம்புகிறேன்.
வழக்காடுவதில் மாநில தொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளது மொழிநுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மாநில மொழிகளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணி தான், அதை சிறப்பாக செய்து வருகிறோம்” என்று பேசினார்.