தமிழகத்தின் இரு மொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு நமக்கு உரிமை பெற்ற நிதியை கொடுக்க காலதாமதம் செய்வதை இன்றைக்கு, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தமிழக எதிர் கட்சி தலைவரும் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.
தமிழக கல்வித்துறைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தரவேண்டிய நிதியை, புதிய திட்டத்தின் பெயரால் நிறுத்தி வைப்பது தமிழகத்தில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மத்திய அரசு திட்டம் இட்டு தடுக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள கல்வி வளர்ச்சியை தாண்டி நாம் இன்று கல்வி வளர்ச்சியில் 59 சதவீதத்தை தாண்டி செல்வதற்கான அஸ்திவாரத்தை இட்டது கலைஞர் கருணாநிதியின் தொலை நோக்கு திட்டம்.
கன்னியாகுமரி எழுத்தறிவு பெற்ற மாவட்டம் இந்த மாவட்டத்தில் இருந்து , தமிழக மக்களின் சார்பில் எங்கள் குழந்தைகளுக்கு புது, புது பெயர்களை சொல்லி எங்கள் மாணவ,மாணவிகளின் கல்விக்கு ஒன்றிய அரசே தடையாக இருக்காது இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் பொய்யாமொழி மகேஷ் தெரிவித்தார்.
