• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா -நடிகர் சிவகுமார் பங்கேற்பு!

Byஜெ.துரை

Mar 1, 2026

JD புரமோட்டர்ஸ் நடத்தும் மூன்றாம்ஆண்டு தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சுயாதீன திரைப்படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 116 திரைப்படங்கள் போட்டிக்காக வந்ததில், பல்வேறு பிரிவுகளில் 13 திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தமிழ்நாடு திரைப்பட தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவை எம்டி பிரமோட்டர்ஸ் சார்பில் ஜாஸ்மின் டேவிட் மூன்றாம் ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி உள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி.குமார், இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன், நடிகர் ஆத்மா பாட்ரிக், நடிகர் அசோக் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களை ஜாஸ்மின் டேவிட் வரவேற்று பேசினார்

“One and Only SS School of Creativity” பள்ளி மாணவர்களின் இசைக்குழு நேரடி இசை நிகழ்ச்சி வழங்கியது. அது விழாவின் முக்கிய சிறபுஅம்சமாக இருந்தது.

விருதுகள் ஐந்து பிரிவுகளில் வழங்கப்பட்டன. ஜூரி குழுவின் தலைவராக இருந்த திரு. சாப் ஜான் எடத்தட்டில், “குணா”, “ஜில்லுனு ஒரு காதல்”, “குருதிப்புனல்” உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர். சிறந்த திரைப்படங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க அவர் உறுதி செய்தார்.

INTERNATIONAL NARRATIVE FEATURE பிரிவில் நான்கு விருதுகள் வழங்கப்பட்டன: “SU RYEON (WATER LILIES)” திரைப்படம் சிறந்த நாரேட்டிவ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. “AUGUST 16 1947” திரைப்படம் சிறந்த முதல் திரைப்பட விருதை பெற்றது.

“BMW 1991” திரைப்படத்தில் நடித்த மாஸ்டர் ஜி.எம். கவுதம் சிறந்த குழந்தை நடிப்பு விருது பெற்றார்.

“THIRU.MANICKAM” திரைப்படத்திற்காக சமுத்திரக்கனி சிறந்த நடிகர் விருது பெற்றார்.

GENERATION NEXT – TEEN INTERNATIONAL NARRATIVE FEATURE பிரிவில் “RHYTHM OF DAMMAM” திரைப்படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றது.

INTERNATIONAL SHORT FILM பிரிவில் நான்கு விருதுகள்:

“FINGER RING” சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டது.

“PARAASAKTHI – THE GODDESS” சிறந்த முதல் குறும்படமாக விருது பெற்றது.

“PARAASAKTHI – THE GODDESS” குறும்படத்தில் நடித்த பாவேல் நவகீதன் சிறந்த நடிகர் விருது பெற்றார்.

“LINCOLN” குறும்படத்திற்கு சிறப்பு ஜூரி பாராட்டு வழங்கப்பட்டது.

INTERNATIONAL DOCUMENTARY பிரிவில் “PUTULNAMA (DOLLS DON’T DIE)” திரைப்படம் சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

STUDENT SHORT FILMS பிரிவில் “KAANADA KADALU (THE UNSEEN SHORE)”, “LOVE ISN’T BLIND”, “A SALAAM TO KALAM” ஆகிய மூன்று குறும்படங்களுக்கு சிறப்பு விழா பாராட்டு வழங்கப்பட்டது.