தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டுமே சிறுபான்மை மக்கள் 75 _சதவீதம் வாழ்கின்றனர். குறிப்பாக கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையான மாவட்டம் என்பதை தேர்தலுக்கு, தேர்தல் பாஜகவால் இங்கு வெற்றிபெற முடியாத நிலை தொடர்கிறது.
தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் மட்டும் தான் பாஜகவை சேர்ந்த பொன். இராதாகிருஷ்ணன் 10 முறை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 8 முறை தோல்வி அடைந்தார், அதுவும் கட்சிகள் கூட்டணி அமைக்காது(காங்கிரஸ், திமுக) கூட்டணி இல்லாத காரணத்தால் பாஜக வெற்றி காண முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்ல. பொன். இராதாகிருஷ்ணன் ஒரு முறை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியையே கண்டார்.


நாகர்கோவில் நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை துறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் நேர் காணல் கூட்டத்தில் பங்கேற்க
தமிழக சிறுபான்மை துறை மாநில தலைவர் H.முகமது ஆரிஃப் பங்கேற்றார். இந்த கலந்தாய்வு கூட்டத்தின் துவக்க வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர்.பினுலால் சிங், நாகர்கோவில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவருமான நவீன் குமார், குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், உட்பட , கட்சியின் பல்வேறு அணியினரும் பங்கேற்ற நிகழ்வில் பேசிய. சிறுபான்மை துறை தமிழக தலைவர் H. முகமது ஆரிஃப் அவர் பேச்சில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் 77_ மாவட்டங்களுக்கும் சென்று அந்தத் காங்கிரஸ் மாவட்ட தலைவரின் ஆலோசனையை கேட்டு அந்தத் மாவட்டத்தின் சிறுபான்மை துறை தலைவர்களின் ஆலோசனையோடு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் மனுக்கள் பெற்று வருகிறேன். அந்த வகையில். தமிழகத்திலே காங்கிரஸ் மாவட்டம், குமரி மாவட்டம் என்னும் புகழ் வாய்ந்த மாவட்டத்தில் இன்று இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ்யின் இணை அமைப்புக்கள் எல்லாம் மாவட்ட தலைமை அமைப்பிற்கு கட்டுப்பட்டது என்ற உணர்வுடன் நம் பணிகள் இருக்க வேண்டும் என தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் சிறுபான்மை துறை பிரிவின் புதிய நிர்வாகிகள் சம்பந்தமான மனுக்களை மாநில சிறுபான்மை துறை தலைவர் மனுக்களை பெற்றார்.
