• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

2024-25 தமிழக பட்ஜெட் : சிறப்பம்சங்கள்

Byவிஷா

Feb 19, 2024

இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு, அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய தலைப்புகளின் கீழ், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் அறிவித்து வருகிறார்.

பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:

▪ சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு

▪ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

▪ தமிழ் மொழியை நவீனப்படுத்த ஏஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு

▪ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்

▪ ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்

▪ கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்

▪ கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்

▪ சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்
▪ 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு

▪ 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு

▪ முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்

▪ நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2சதவீத மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி

▪ சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு

▪ சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

▪ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

▪ வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு

▪ மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு

▪ அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு

▪ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

▪ சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம்

▪ 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

▪ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

▪ வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்

▪ சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

▪ நாமக்கல்லில் ரூ.358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

▪ வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1000 கோடி!

▪ அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 குக்கிராமங்களில் 1,147 கோடி ரூபாய் ஒதுக்கீடு.