• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்க்கடல் “நெல்லை கண்ணன்” காலமானார்..

Byகாயத்ரி

Aug 18, 2022

தமிழ்க்கடல் என்று பெரும்பாலும் அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் தன் 77வது வயதில் காலமானார். தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், அரசியல்வாதியுமான தமிழ் கடல் நெல்லை கண்ணன் இன்று உடல் நல குறைவால் காலமானார் . காந்தி , காமராஜர் உள்ளிட்டோரின் கருத்தியல்களை தாங்கி அரசியலில் களமாடியவர். இவர் தமிழ் புலமையால் தமிழர்களின் நெஞ்சங்களில் குடியிருந்தவர். அண்மையில் திமுகவின் ஆதரவாளராக இருந்த நெல்லை கண்ணன் காங்கிரஸ் கட்சியின் தீவிர பற்றாளராக அறியப்பட்டவர். இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை கண்ணன் உயிரிழந்தார். நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.