• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் ஆய்வு

BySeenu

Nov 4, 2024

தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர் கருவிகள் கொண்டு அதன் தரத்தையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு..,
இந்த 3 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை 658 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை செப்பணிடப்பட்டு உள்ளது எனவும், இன்னும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

7 பாலப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 2 பாலப்பணிகள் 5.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேற்கு புறவழிச்சாலை 3 கட்டமாக பிரித்து கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். அவினாசி சாலை மேம்பால பணிகள் ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும் எனவும் கூறினார். 3 பாலப்பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகளால் அந்த பாலப்பணிகள் நிறுத்தப்பட்டது எனவும் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் 3 பாலப்பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

நெடுஞ்சாலை துறை சார்பில் தரமான பாலப்பணி நடந்து வருகிறது எனவும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பால பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அடுத்து, சிங்காநல்லூர் பகுதியில் பாலப்பணிகள் நடைபெறும் எனவும் கூறினார். பசுமை வழிச்சாலை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் சத்தியமங்கலம் சாலையில் உள்ள சில ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து மத்திய அரசுடன் வலியுறுத்தப்பட்டது என தெரிவித்த அவர், அதனை எதிர்க்கும் விவசாயிகள் அதே சாலையில் தான் பயணிக்கின்றனர் சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதை அந்த பகுதி விவசாயிகளிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருட்களை கொண்டு செல்லவே இதுபோன்ற சாலைகள் தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.