• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அடுத்தடுத்து மின் கம்பங்கள் வீட்டின் கூரைமேல் சாய்ந்து விபத்து- 50 குடும்பம் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைப்பு

நள்ளிரவு பெய்த மழையால் சேலத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் சாய்ந்து வீட்டின் கூரை மேல் விழுந்து விபத்து. மின்தடை ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 50 குடும்பத்தினர் உயிர்தப்பினர்.

சேலம் மாநகராட்சி பாரதியார் நகர் கொல்லம்பட்டறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட கூலித்தொழில் செய்து வரும் குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் டிரான்ஸ்பார்ம் கம்பம் இருந்துள்ளது.

இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவு சேலம் மாநகர பகுதியில் பெய்த கன மழை காரணமாக அப்பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 4 மின்சாரக் கம்பங்கள் அடுத்தடுத்து குடியிருப்பு வீடுகள் மேல் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக கம்பம் சரிந்து விழுந்த போது மின்சாரம் எதுவும் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்தப்பினர்.