விருதுநகர் மாவட்ட அளவிலான எட்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் தேசிய திறனாய்வு தேர்வு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது .
அதில் மேலத்தாயில்பட்டி கி.ரெ.தி.அ. அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கௌதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், ஸ்ரீனிவாஸ், என மாணவர்கள் அதிகபட்சமாக ஐந்து பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் அமுதன் என்ற மாணவன் தேர்ச்சி பெற்றுள்ளான்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பாராட்டினார்கள்.
ஆண்டு தோறும் நடைபெற்று வரும் திறனாய்வு தேர்வில் தொடர்ந்து இப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.