வடக்கன் குளம் பாலகிருஷ்ணணா பள்ளியில் 9 வகுப்பு பயிலும் சாய் என்ற மாணவன் சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் தண்ணீரை குடித்துவிட்டு, குப்பையில் வீசும் ஒரே வடிவமான பிளாஸ்டிக் பாட்டில்கள் 1330_யை திரட்டி. அந்த பாட்டில்களில் 1_முதல் 1330_ திருக்குறளை எழுதியதை.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள கடற்கரை பகுதியில் தரையில்
1330_ திருக்குறள் எழுதிய பிளாஸ்டிக் பாட்டில்களை திருக்குறள் என்ற எழுத்து வடிவில் அடுக்கி இருந்தனர்.
கன்னியாகுமரி வந்த பன்மொழி சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.

தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டிந்த திருக்குறள் எழுதப்பட்டிருந்த பாட்டில்களை பார்வையிட்டதுடன் 9_ம் வகுப்பு மாணவன் சாய் முயற்சியை பாராட்டி, மாணவனை பாராட்டி பொன்னாடை அணிவித்தார்.