கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஆகாஷ். இவரும் இவரது நண்பருமான பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரும் இருசக்கர வாகனத்தில் வேப்பூரில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கண்டபண் குறிச்சி பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற அவரது நண்பர் ஜஸ்டின் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த ஜஸ்டினை வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.