கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பரசு மகன் அஜிஸ் வயது 6 இவர் அதே ஊரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தெரு நாய் அஜிஸ் முகத்தில் கடித்தது. அஜிஸ் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரு நாயிடம் இருந்து சிறுவனை மீட்பு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர்.

மேலும் நேற்று சின்னசாமி மகள் பிரியதர்ஷினி வயது 12 என்பவரையும் அதே நாய் கடித்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.கிராமத்தில் உள்ள தெரு நாய்களை ஊராட்சி நிர்வாகம் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்