திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் போலியான அலாட்மென்ட் சான்றிதழ் கொடுத்து MBBS-ல் சேர்ந்த மருத்துவ மாணவி, மாணவியின் தாய் தந்தை கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல், பழனி, புது தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்த சொக்கநாதன் – விஜயமுருகேஸ்வரி தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீ வர்ஷினி என்பவர் குடும்பத்துடன் வந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த மாதம் 25-ம் தேதி மருத்துவ மாணவ சேர்க்கைக்கான போலியான இட ஒதுக்கீடு உத்தரவை (provisinonal allotment order) கொடுத்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீடு உத்தரவு உள்ளிட்டவற்றை சென்னைக்கு அனுப்பி ஆய்வு செய்தனர் . அவை போலியானவை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்( பொறுப்பு) டாக்டர் வீரமணி இது குறித்து மாவட்ட S.P. பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு DSP.குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, நம்பிக்கை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட காருண்யா ஸ்ரீ வர்ஷினி, தந்தை சொக்கநாதன், விஜயமுருகேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.