• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலங்கையில் கராத்தே பயிற்சியில் மாணவன் சாதனை!

தமிழ்நாட்டைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு 26 நாடுகளில் கிளைகளை ஆரம்பித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றி வரும் சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையினூடாக ஒரு புதிய சோழன் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டி மாவட்டத்தின் கம்பளை பகுதியில் அமைந்திருக்கும் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவனும் கிருஷ்ணபழனி மற்றும் இந்திராணி தம்பதிகளின் புதல்வனுமான 20 வயதான தர்சன் எனும் இளைஞர் ஒரு நொடியில் 7 கராத்தே குத்துகளை (ஜுதான் சுகி) செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தார்.

இச் சோழன் உலக சாதனை நிகழ்விற்கு இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அனுராத ஜெயரத்ன முன்னிலை வகித்தார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் முனைவர் யோகதாசன் ஜூட் நிமலன் மற்றும் கண்டி மாவட்ட தலைவர் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரகுமார் உள்ளிட்டோர் நடுவர்களாக கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.

‘தென்ஷின்கான்’ கராத்தே பள்ளியின் தலைமை ஒருங்கிணப்பாளர் கராத்தேயில் 7th Dan பெற்ற சிகான் மனோஜ் உனன்தென்ன மற்றும் கராத்தேயின் 3rd Dan பெற்ற ஆசான் சந்திரமோகன் ஆகியோர் இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந் நிகழ்வை தமிழ்நாட்டின் தலைமையகத்தில் இருந்து காணொளி வாயிலாக கண்காணித்து, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் தலைமைச் செயற்குழுவின் வழக்கறிஞர் உயர்திரு கலைலிங்கம் மற்றும் தலைமைக் செயற் குழுவின் பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன் ஆகியோர் உறுதி செய்தனர்

உலகில் அதிக கராத்தே குத்துக்களை செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த கராத்தே மாணவன் தர்சனை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் 26 நாடுகளின் தலைவர்கள் மற்றும் இலங்கை வாழ் மக்களும் வாழ்த்திப் பாராட்டினார்கள்