விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளாகத்தில் அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பைரவருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




