• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

ByK Kaliraj

Nov 12, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவிலில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, வடமாலை சாத்தப்பட்டு தீபாரதனை, நடைபெற்றது. தொடர்ந்து தொழில் அபிவிருத்திக்காக தடியங்காயில் விளக்கேற்றி வழிபட்டனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.