கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அருகாமையில் உள்ள ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடற்கரை கிராமமான புத்தன்துறை பகுதியில் முன் இரவு நேரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்து வருவதை அறிந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடனடியாக சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அரசு ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், பங்கு தந்தை மற்றும் ஊர் பொது மக்கள் உடனிருந்தனர்.


