• Tue. Jun 18th, 2024

கள்ளக் கடல் 65_ஆண்டுகளுக்கு முன் செவிமடுத்த செய்தி. முதிர் மீனவர் சொன்ன தகவல்கள்

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொது மக்கள் யாவரும் செல்ல வேண்டாம். குறிப்பாக கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் எவரும் குளிக்க வேண்டாம், குமரி மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை எவரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிப்பை அடுத்து, குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், குமரி மாவட்டத்தில் இன்று இரவு வரை(ஜூன்_11) கடல் அலைகள் 2. 6 மீட்டர் உயரம் எழும்ப வாய்ப்புள்ளது, மேலும் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடையை மீறி கடற்கரை பகுதிகளில் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கடற்கரை பகுதியில் கடல் சாதாரண நிலையில் இருப்பதால். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

“கள்ளக் கடல்”என்ற சொல் குறித்து கன்னியாகுமரி வாவத்துறை என்ற மீனவ கிராமத்தை சேர்ந்த முதியவர் இயேசு அடிமை என்ற மீனவரிடம் கேட்டபோது. நீண்ட ஆலேசனைக்கு பின் முதியவர் சொன்ன தகவல்கள்.

நான் சிறுவனாக இருந்த போது இராமோஸ்வரம் பகுதியில் கடுமையான புயல் வீசி பெரும் பாதிப்பை ஏற்படுத்ததியுடன், தனுஷ்கோடி என்ற பகுதி முற்றிலுமாக அழிந்தது. அப்போது தான் கடலின் மூன்று தன்மைகள் ஆன ஆழ்கடல்,உள்கடல்,கரைக்கடல் என்ற தன்மை உள்ளது. மூன்றும் சமகாலத்தில் உட்பட்டு எழும் அலைகளின் வேகத்தை தான் கள்ளக்கடல் என அடையாளப்படுத்துவார்கள். நீண்ட காலத்திற்கு முன் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக் கடல் என்ற வார்த்தையை கேட்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரை சுற்றுலா பயணிகள் எவரும் இல்லாமல் வெறிச்சோடி காட்சி அளித்தது. கடற்கரை பகுதியில் காவல்துறை மற்றும் சுற்றுலா காவலர்களும் கண் காண்பிப்பு பணியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *