• Tue. Jul 2nd, 2024

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி SDPI கட்சியினர் போராட்டம்

BySeenu

Jun 27, 2024
கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மருத்துவக் கல்வி கார்ப்பரேட் மயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நீட் தேர்வு முறையை கண்டித்தும் SDPI கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்ணைக்கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கண்ணைக்கட்டி கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

24 லட்சம் பேர் நீட் தேர்வில் எழுதுகிறார்கள் ஆனால் ஒரு லட்சம் பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் உள்ளது. மீதமுள்ள 23 லட்சம் பேர் மருத்துவ படிப்பு, படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

நீட் தேர்வு முறைகேடில் கைது செய்த நபர் 700 நபர்களுக்கு வினாத்தாளை வெளியிட்டு 300 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறார்.இதனால் ஏழை எளிய மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நீட் பயிற்சி மையங்களில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சுமார் ஒரு லட்சம் பெற்று பயிற்சி வழங்குகின்றனர். இதனால் நீட் பயிற்சி மையங்கள் அதிக அளவில் கொள்ளையடித்து வருகின்றனர்.

நீட் தேர்வு தற்போது ஒரு பெரிய வியாபாரமாக மாறிவிட்டது என்றும் தர்மம், நீதி, கருணை இல்லாமல் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஏழை எளிய மாணவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *