• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நவீன கொலு பொம்மைகளுடன் சரஸ்வதி பூஜை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழவண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலுவில், அடுத்த தலைமுறையின் நலன்கருதி விழிப்புணர்வு சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், மேம்பாலங்கள், காற்றாலைகள் குறித்த கொலு சிற்ப கண்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் வருகை. இது குறித்து குழந்தைகள், சிறுவர்களுக்கு விளக்கிய ஊர்பொதுமக்கள்.

நவராத்திரி பூஜை ஆனது இந்தியா முழுவதும் தொழில் சார்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது,இந்நிலையில் தமிழகத்தில் நவராத்திரி விழா மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுவதுண்டு நவராத்திரி ஆனது தொழில், வியாபாரம் மற்றும் குடும்பத்தில் லட்சுமி கடாட்சியம் பெற பத்து நாட்கள் விரதம் இருந்து சரஸ்வதி தேவியை வணங்கி கொலு வைத்து வழிபடுவதுண்டு, அந்த வகையில் கோவில்களில் மிகப் பிரமாண்டமாக கொலு வைத்து வழிபடுவார்கள், இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கீழவண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர்,இந்த வருடம் நவராத்திரி விழா கொலுவில் அப்பகுதி இளைஞர்கள்,சிறுவர்கள், பொதுமக்கள் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நவராத்திரி கொலுவில் தெய்வ வழிபாடு மட்டும் அல்லாமல் கல்விக்கும், பொது அறிவிக்கும் சிந்தனை ஊட்டும் வகையில் சாலை மேம்பாடு மற்றும் குமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சார காற்றாலை குறித்த சிற்பங்கள், தமிழகத்தின் தலைசிறந்த தஞ்சை பெரிய கோயிலின் மாதிரி வடிவம் உள்ளிட்ட சிற்பங்களை செய்து சிறுவர்கள்,குழந்தைகள் அறிந்திடும் வகையிலும், பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் விதமாகவும், நவராத்திரி தினசரி பூஜை இடம் பெற்றுள்ளன,மேலும் நவராத்திரி கொலுவில் தன் மகன் என்றும் பாராமல் அதர்மத்தை எதிர்க்கும் வகையில் , நீதி வழங்கிய மனுநீதி சோழனின் நீதிக் கதைகள் போதிக்கும் சிற்பங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன, இதனை காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் அல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த பொதுமக்களும் வந்து பார்த்து செல்கின்றனர், இதனால் கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவில் களைகட்டி உள்ளது.