கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற திரைப்பட நடிகை கெளதமி. பவர்ணமி நாளில் கன்னியாகுமரியில் நடந்த சமுத்திர ஆராத்தி.
குழித்துறை, அகஸ்தீசுவரம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் மாணவ மாணவிகள் இடம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்வுகள்,

நாகர்கோவில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற குமரி கிழக்கு மாவட்ட இளைஞர், இளம் பெண் பாசறை நிகழ்வில். அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளர் என்ற பொறுப்பில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்ற கெளதமியும், தோவாளை பேரூராட்சி தலைவி சாந்தி, தளவாய் சுந்தரம் பங்கேற்ற இடங்களுக்கெல்லாம் காரை திரைப்பட நடிகை கெளதமியே ஓட்டிச் சென்றார்.

குமரி அதிமுகவின் விருந்தினராக வந்த கெளதமி பங்கேற்ற எல்லா நிகழ்விடங்களுக்கும் வாகனத்தை அவரே ஓட்டிச் சென்றது. கல்லூரி மாணவ, மாணவிகள், அதிமுக கட்சியினர் மத்தியில் ஒரு புதிய உற்சாகமாக சூழலை ஏற்படுத்தியதை காண முடிந்தது.