• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘ஐட்டம்’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சமந்தா.., இணையத்தில் குவியும் லைக்குகள்..!

Byவிஷா

Dec 11, 2021

‘புஷ்பா’ படத்தில் சமந்தா குத்தாட்டம் போட்ட ஐட்டம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புஷ்பா’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.


மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்பபடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. அண்மையில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு பிரபல முன்னணி நடிகை சமந்தா குத்தாட்டம் ஆடுகிறார். ஐட்டம் பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போடுவது இதுவே முதன்முறை. இந்நிலையில் இந்தப்பாடலின் ரிலிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்ற அதே வேளையில் தெலுங்கில் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்களுடன் கூடிய லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப்படம் வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.