காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது .

விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இனிவரும் காலங்களில் காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
நேர கட்டுப்பாட்டை மீறும் வாகனங்கள் அதிவேகமாக செல்லும் டாரஸ் வாகனங்கள்
குடிபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள்
உரிய வாகன சான்றிதழ்கள் இன்றியும் சரியான எண் பலகை இன்றி வரும் வாகனங்கள் ஆகியோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள்.

விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இலக்கினை அடைய எடுக்கப்படும் முன்னெடுப்புகளுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அறிவித்துள்ளார்.






