கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் அவர்களின் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நாகர்கோவில், ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் சுடலைமுத்து பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். வில்லுப்பாட்டு, தெருக்கூத்தில் நல்ல கருத்துகளை மக்களுக்கு விளக்கியவர். சொந்தமாக நாடக கம்பெனியை நடத்தியவர். படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து திரை உலகில் நடிகராக திகழ்ந்தார். மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். கலை உலகில் கொடை வள்ளலாக திகழ்ந்தவர். 1936-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலிலாவதி படத்தில் இவரும் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணமானவர் கலைவாணர் தான் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டுள்ளார். பிறருக்கு உதவுவதில் ஒரு கர்ணணாக திகழ்ந்தார் கலைவாணர். இவர் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் 49-வது வயதில் மறைந்தார்.


இன்று (30-08-2024) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 67-வது நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் கே.எல்.எஸ்.ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்.சுந்தர்நாத், முத்துக்குமார், பொன்.சேகர், ராஜகுமார், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், மாநகராட்சி உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், அனிலாசுகுமாரன், கோபால சுப்பிரமணியம், மாவட்ட அணிச் செயலாளர்கள் ராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர்.









