காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடர்ந்து சாலை விபத்துக்கள் நடந்து வருவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் போராளிகள் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காவல்துறையின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் காரைக்கால் போராளிகள் குழு சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை சந்தித்து சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
சாலையில் சுற்றி தெரியும் மாடுகளைப் பிடித்து அதனை பராமரிக்கும் செலவை காரைக்கால் போராளி குழு ஏற்றுக்கொள்வதாகவும், விபத்துக்களை தடுக்க மாடுகளுக்கு கழுத்தில் ரிப்லெக்டிங் (பிரதிபலிக்கும்) ஸ்டிக்கர் வாங்கி தருவதாகவும் தெரிவித்த காரைக்கால் போராளிகள் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.













; ?>)
; ?>)
; ?>)