• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மகளிர் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை..,

ByK Kaliraj

Nov 20, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் இல்லாததால் குகன் பாறை செல்லும் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் பெண்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் குகன் பாறை செல்லும் மெயின் ரோட்டில் பட்டாசு ஆலைக்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள், விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய விவசாயிகள், தனியார் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் மாணவ, மாணவிகள், மூக்கை மூடி கொண்டு செல்லும் வகையில் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகையால் இப்பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கடந்த 20 வருடங்களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன் பேரில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது ஆனால் சகோதரர்கள் திறப்பு விழா நடைபெறாமல் கண்காட்சி பொருளாக இருந்து வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய சுகாதார வளத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..