சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில். சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதியில்.

தேவி பகவதியம்மன் கோவில் பின் பக்கமிருந்து, மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதி வரையிலான நடைபாதையை,ஒற்றையடி பாதை போன்ற நிலைக்கு மாற்றி. சுற்றுலா பயணிகள் நடந்து செல்லமுடியாது,ஒரு செயற்கையான மக்கள் நெரிசலை உருவாக்கி வைத்தது நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால்,
பாதை ஆக்கிரமிப்பு மட்டும் அல்லாது வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டையில் வெளிப்படும் அநாகரீக வார்த்தைகள் காதில் பட்டு காது கூச்சம் அடைய செய்யும் நிலை,

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற தேவஸ்தானம் அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும். கடைகள் அகற்றப் படாத நிலையில்,
இன்று (நவம்பர்_06) கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் மேலாளர் ஆனந்தன் முன்னிலையில். காவல் துறை பாதுகாப்புடன், கோவில் பணியாளர்களால்
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.









