• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரீல் லைஃப் அப்பா மகன் மீண்டும் கூட்டணி

Byமதி

Sep 30, 2021

நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்த கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.. படப்பிடிப்பு தளத்தில் கருணாஸ், கென் உடன் தனுஷ் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.