கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பேவர் ப்ளாக் தரை தளம் ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா செய்தியாளர்களை அழைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் அவமதித்தது செய்தியாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று மாமன்ற உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களை பெருமைப்படுத்தியது ஒரு திருப்பு முனையாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. மூத்த செய்தியாளர்கள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியும் தெரிவித்தனர்.
https://arasiyaltoday.com/book/at25072025