• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரியில் சட்டசபை கூட்டம் – சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

ByB. Sakthivel

Mar 11, 2025

புதுச்சேரியில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற 12-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம்..,

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 27-ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறும் என்றும், 12-ம் தேதி காலை 9:30 மணி அளவில் நட்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என்று தெரிவித்தார்.

2025 -26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொகை 13,600 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்த சபாநாயகர் செல்வம் பட்ஜெட் உரையும் கையடக்க கணினியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும். இதனை பயன்படுத்தும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.