• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

ByT. Balasubramaniyam

Nov 19, 2025

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவிற்கிணங்க,அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,பங்கேற்று 10 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.10,21,120 மதிப்பில் தங்க நாணயங்களும், 7 பயனாளி களுக்கு ரூ.1,36,666 மதிப்பில் வங்கி கடன் மானியங்களும், 10 பயனாளி களுக்கு ரூ.11,44,000 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 16 பயனாளி களுக்கு ரூ.1,01,744 மதிப்பில் மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், 22 பயனாளிகளுக்கு ரூ.3,18,780 மதிப்பில் வாய் பேசாத மற்றும் காதுகேளாதமாற்றுத்
திறனாளிகளுக்கு மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் பேசிகளும், 27 பயனாளிகளுக்கு ரூ.4,25,250 மதிப்பில் சக்கர நாற்காலிகளும், 5 பயனாளி களுக்கு ரூ.57,225 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களும், 4 பயனாளிகளுக்கு ரூ.3,876 மதி;ப்பில் ஊன்றுகோலும், 3 பயனாளிகளுக்கு ரூ.1,782 மதிப்பில் எல்போ ஊன்றுகோலும், 3 பயனாளிகளுக்கு ரூ.5,268 மதிப்பில் பிரெய்லி கை கடிகாரங்களும், 77 பயனாளி களுக்கு ரூ.2,49,660 மதிப்பில் காதொலி கருவிகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.14,432 மதிப்பில் கார்னர் சீட் என மொத்தம் 186 பயனாளிகளுக்கு ரூ.34,79,803 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை,மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி முன்னிலையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரியலூர் நகர திமுக செயலாளர் இரா .முருகேசன், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செயல்திறன் உதவியாளர் செல்வகுமார், இதர அரசு அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.