• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Oct 12, 2025

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி, ஆர்,கவாய் மீது செருப்பு வீச முயற்சித்த வழக்கறிஞர் கிஷோரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினரும், மாவட்டத் துணைச் செயலாளருமான டி தண்டபாணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி ஆறுமுகம், அரியலூர் ஒன்றிய செயலாளர் து, பாண்டியன், ஆகியோர் வழக்கறிஞர் கிஷோ ரின் சனாதன செயலை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி மருதமுத்து, தா, பழூர் ஒன்றியம் சா, அபிமன்னன், செந்துறை ஒன்றியம் கே.சிவகுமார், ஆண்டிமடம் ஒன்றியம் பாலமுருகன், சு, கவர்னர், அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி ரெ, நல்லுசாமி, பா, காத்தவராயன், அருந்ததி, செ,கலா, நீ, சூர்யா, கயர்லாபாத் பெ, பார்த்திபன், ரா, பானுமதி, கட்டடத் தொழிலாளர் சங்கம் டி ஜீவா மற்றும் ஊடகப் பொறுப்பாளர் டி.கே காத்தவராயன், இளைஞர் பெருமன்றம் தமிழ்மொழி, செட்டிக்குழி பாலன், கல்யாணசுந்தரம், சேகர், தர்மலிங்கம், ராமலிங்கம், சங்கர், அந்தோணி, அரியலூர் முருகேசன் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.