அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஒன்றிய பாஜக அரசைகண்டித்து,அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். மகேந்திரன் தலைமை தாங்கினார்.

அரசு போக்குவரத்து கழக தொமுச மத்திய சங்க செயலாளர்டி.சேகர்,அரியலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச செயலாளர் பிவி அன்ப ழகன் ,திமுக தொண்ட ரணி மாவட்ட தலைவர் எம். அன்பழகன்,தொமுச தலைவர் எம் கனகராஜ், ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச தலைவர் ஆர் கொளஞ்சி, தொமுச நிர்வாகிகள் முத்துக்குமார்,எஸ். செல்வம்,பி சித்திர வேல்,எம்.ஏ. அந்தோணி சாமி,பி.சுப்பிரமணியன், எம் சிவக்குமார்,கே சின்னையன்,வி முத்தையன்,எம் சுவாமிநாதன்,பி ச செந்தில்குமார்,பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி ஜேம்ஸ்,பி ஜெய்சங்கர், கே குமார்,என் சக்திவேல், ஆர் கணேசன், பி ராஜதுரை,சி இளங்கோவன்,எம் கம்பர்,வி தன்ராஜ், டி ஆசை தம்பி,எம் ரமேஷ் குமார்,டி நடராஜன், பி வில்வேந்திரன்,தொமுச நிர்வாகிகள் வி இராம லிங்கம், மதுபாலன், கே. ஆனந்தராஜ் ,எம். கார்த்திக், துரை பாண்டியன், க.ராஜா, ஆர்.நீலமேகம், உள்ளிட்டோர் முன்னிலைவகித்தனர்.

டாஸ்மாக் தொமுச ரெ.சங்கர்,மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எம் ஜெயக்குமார்,தொமுச கே. கருணாநிதி (நகராட்சி) தொ.மு.ச டாஸ்மாக் கொளஞ்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு,சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 4 தொகுப்பு தொழிலாளர் கள் நலச் சட்ட திருத்ததை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பி, சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மணக்குடி வி .மதியழகன் நன்றி கூறினார்.








