தமிழ்நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு இடர்பாடுகளை களைவது தொடர்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் உசிலம்பட்டி வட்டார அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் இணைந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஓய்வூதியம், பணி நிரந்தரம், முதல்வர் மருந்தகத்தில் விற்பனையை கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடங்களை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கண்டன கோசங்களாக எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.