• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குமரி மாவட்டத்தின் குழித்துறை மறை மாவட்டத்தின் புதிய ஆயரை திருத்தந்தை பிரான்சிஸ் நியாமனம்…

குமரி மாவட்டத்தின் கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமையக கோட்டார் மறைமாவட்டம் என்னும் பெயரில் திகழ்ந்தது. அதற்கு முன் கொல்லம் மறைமாவட்டமாக இருந்தது..

குமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் பகுதியில் இருந்து பிரிந்து தாய் தமிழகத்தோடு இணைந்த சூழலில், குமரி மாவட்டத்தில் வாழ்கிற கத்தோலிக்க கிறித்தவ மக்களின் ஆயராக ஆயர் ஆக்கினி சாமி இருந்தார், அவருக்கு பின் ஆயராக ஆரோக்கிய சாமி, அவருக்கு பின் ஆயராக லியோன் தர்மராஜ் இவரை அடுத்து பீட்டர் ரெம்ஜூயூஸ் ஆயராக பதவி ஏற்றார்.

கோட்டாறு மறைமாவட்ட என இருந்த காலையில். குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறித்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்த நிலையில்.

குழித்துறையை தலைமையிடமாக கொண்டு புதிய மறைமாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஒரு கோரிக்கை குரல் எழத்தொடங்கியது,அதனை தொடர்ந்து வலியுறுத்தும் போராட்டம் அங்காங்கே நடந்தது அந்த காலக்கட்டத்தில் கோட்டார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்தவர் பீட்டர் ரெம்ஜூயூஸ்.

கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெம்ஜூயூஸ்,குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள கத்தோலிக்க கிறித்தவர்கள் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப குரல் குறித்து வத்திக்கானில் இருக்கும் உலக கத்தோலிக்க கிறித்தவர்களின் அன்றைய மதத்தலைவர் போப் ஆண்டவருக்கு தகவலுடன் பரிந்துரையும் செய்தார்.

குழித்துறையை தலைமையிடமாக கொண்டு புதிய மறைமாவட்டத்தை அறிவித்து.குழித்துறை ஆயராக வத்திக்கான் நியமித்த முதல் ஆயர் ஜெரோம் தாஸ் வருவேல் ஆயராக பதவி ஏற்றார். முதல் ஆயரே சில வருடங்களில் ஆயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில் மதுரை பேராயர் அந்தோணி பாப்பு சாமி, குழித்துறை பொறுப்பு ஆயராக இதுவரை இருந்தார் ஒரு ஆண்டுக்கு மேலாக.

திருத்தந்தை பிரான்சிஸ் (உலக கிறிஸ்தவ மத தலைவர்) குழித்துறை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக மேதகு . ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் அவர்களை அறிவித்த நிலையில்.

கோட்டாறு மறைமாவட்ட ஆயர். முனைவர் நசேரன் சூசை, குழித்துறை ஆயராக மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டரை ஆயராக திருநிலைப்படுத்தியதுடன் கோட்டார் மறைமாவட்டத்தின் சார்பில் அவரது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.