சுவாமி விவேகானந்த கேந்திரத்தில் பணியாளர்கள் பொங்கல் விழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார்.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழாவில், கேந்திரத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர வளாகத்தில் பாரதமாதா ஓவியத்தின் முன் நடைபெற்ற பொங்கல் விழாவில். கேந்திராவின் துப்புரவு பணியாற்றும் பெண்கள் 50_பேர் பங்கேற்றனர்.


பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு, அவரது சொந்த செலவில் பெண்களுக்கு புத்தாடை வழங்கினார்.

நிகழ்வில் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிக்கும் பொங்கலும், செங்கரும்பும் கேந்திர நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.







