தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாவட்டங்கள் தோறும் மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நாகர்கோவில் கழக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
- இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால், முன்னாள் எம்.பி நாஞ்சில் வின்சென்ட் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




