இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதுடன் சூரிய உதயம், அஸ்த்தமனம் காட்சியை காணக்கூடிய நில அமைப்பு கொண்ட பகுதி.
கன்னியாகுமரி கடல் நடுவே அடுத்து, அடுத்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு, கடலில் படகு பயணம் செய்து சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டும்.
கடலில் சிறிய இடைவெளியில் சுற்றுலா பயணிகள் செல்லும் இடம் இருந்தாலும். திருவள்ளுவர் சிலை பாறைக்கு தினசரி படகு போக்குவரத்து நடைபெறாதது ஒரு காரணம் கடல் நீரோட்டத்தின் தன்மையால், திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்வையிட முடியாத ஏமாற்றம் அடையும் சுற்றுலா பயணிகளின் கருத்தை ஏற்று தமிழகத்தில் தி மு க ஆட்சி ஏற்பட்ட பின் குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட உள்ளூர் தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் வெளி படுத்திய கோரிக்கை. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு இடையே இருக்கும் கடல் பரப்பில் பாலம் அமைத்தால், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அனைத்து சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்தை எதிர் பார்க்காது செல்ல முடியும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டு நினைவு சின்னங்கள் இடையே பாலம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தடையின்றி நடந்து வந்தது.
இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் பரப்பின் இடையே 6 ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைந்ததும் அடுத்து கூண்டு பாலம் பணிகள் தொடங்க உள்ளது. ராட்சத தூண்கள் ஒவ்வொன்றும் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தூண்களை கடல் காற்றின் உப்பு தன்மை பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் அமைக்கப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கடல் பரப்பில் அமையும் கூண்டு பாலத்தின் பாகங்கள் உருவாக்கப்பட்டது.இந்த கூண்டு பாலத்தின் மொத்த எடை 222_டன்.கடலின் உப்பு காற்றால் துருப்பிடிக்காத வகையிலான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டு 101 துண்டு களால் ஆனது.
கடல் பரப்பில் அமையும் கண்ணாடு கூண்டு பாலத்தில் நடந்து செல்லும் பயணிகள் கடலின் அழகு மற்றும் நடந்து செல்லும் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கடலையும், அலை கூட்டத்தையும் ரசித்தபடி செல்லும் வகையில் இந்த கண்ணாடி கூண்டு அமைக்கப்படுவதை. இன்று பாலப் பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
