நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை பத்திரிக்கை செய்தி (08.10.2025) இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு .சு. செல்வகுமார் இ. கா. ப அவர்கள் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து 07 மனுக்களை பெற்றார்கள்.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.மேலும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களுக்கு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்கள்.
