ஜன சங்கத்தை உருவாக்கி பாஜக உருவாக காரணமாக இருந்தவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா. இவரின் 109 ஆவது பிறந்த தினமான இன்று சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் திருநள்ளாறு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா வின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு அண்ணாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருநள்ளாறு தொகுதி பாஜகவினர் செய்திருந்தனர்.











; ?>)
; ?>)
; ?>)