• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே..,

குமரியை அடுத்துள்ள பணக்குடிவரை வந்த எடப்பாடி குமரிக்கு வராது திரும்பியதை,
அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள், முதியவர்கள் வெளிப்படுத்திய ‘
‘கமாண்ட் ‘

கலைஞர் அன்று சொன்ன இன்றும் தமிழக அரசியல் கட்சியினர் மறக்காதது. நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே.

கலைஞரின் சொல்லாடல் எடபடியின் நினைவில் வந்ததோ?என கருத்து பரிமாற்றம் செய்துக்கொண்டதை கேட்கவும், பார்க்கவும் முடிந்தது.

இத்தகைய நிலையில் தான் கன்னியாகுமரி அருள் மிகு பகவதியம்மன் கோவிலில் தொடங்கிய,ஆடிமாத களபூஜையின் முதல் நாளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணம் வெற்றி அடைய சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அதற்கான
பிரசாதத்தை கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்வர், இன்றைய தமிழக சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடம். அதிமுக அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர், கன்னியாகுமரி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் , தெற்கு ஒன்றிய பொருளாளர் தங்கவேல், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன், குமரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின்
பொருளாளர் பகவதியப்பன் ஆகியோர் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.