ஆரல்வாய்மொழி அடுத்த செண்பக ராமன் புதூர் ஹெச்.எம்.எஸ் சிஎஸ்ஐ திருச்சபையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர் டாக்டர்.பி.டிசெல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய கலையரங்கம் கட்டித்தந்து திறந்து வைத்தார்.

திறப்புவிழா நிகழ்ச்சிக்கு விசாரணை போதகர் ஜாண் பீட்டர் தலைமை தாங்கினார். சேகர ஆயர் ஆரல்வாய்மொழி .ரசல் ஐசக் மற்றும் சபை போதகர் ஜெப சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்வில் கலப்பை குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் , கலப்பைமக்கள் இயக்க சிறுபான்மை பிரிவு தலைவர் அருள்ராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் ஏசுதாசன் ,மகளிரணி நிர்வாகி ஹெலன் அருணா, ஆரல்வாய்மொழி ஊர் தலைவர் பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணக்கர் லில்லி ராணி,பொருளாளர் பாய்,ஸ்டான்லி எட்வின் ஜோசப் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





