காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிர வாதிகளின் தாக்குதலில்,
அப்பாவி மக்கள் 26 பேர் மரணம் அடைந்த நிலையில் இந்திய இராணுவம்
‘ஆபரேஷன் சித்தூர்’ தாக்குதல் நடத்தி பாக்கிஸ்தானில் தீவிரவாதிகளின் 6 முகாங்களை அழித்தது.

நாட்டின் பாதுகாப்பு கண்காணிப்பில் எச்சரிக்கை, பாதுகாப்பு அதில் முக்கியமானது கடலோரப் பாதுகாப்பு என்பதை தொடர்ந்து கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள்,ஒப்பனை தீவீரவாதிகளை கைது செய்வது என்ற பல்வேறு பாதுகாப்பு பணியில் தீவிரமாக செயல்படும் வரிசையில்.
குமரி மாவட்டம் கூடன்குளம் முதல் ,நீரோடி வரையிலான கடல் பரப்பில் கண்காணிக்கும். ஆபரேஷன் சாகர் கவாச் 1/2025 என்ற பாதுகாப்பு ஒத்திகை இன்று (ஜுன்_25,26) தேதிகளில் நடக்கிறது.

இன்று காலை (ஜுன்25)06.00 மணிக்கு தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6மணி வரை நடைபெறும்.
கன்னியாகுமரி கடல் பரப்பில் நடக்கும். ஆபரேஷன் சாகர் கவாச் 1/2025 ஒத்திகை கடலோர பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில். கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகை கடலில் நடப்பதை போன்று, கடலோர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு காவல்துறையும் மேற்கொண்டுள்ளனர்.