விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தபோது, அப்போது மண்குண்டாம்பட்டி முக்குரோடு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் இஸ்ரேவேல் வண்டியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.