• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிராக்டர் மீது ஏறி இறங்கிய பேருந்து ஒருவர் பலி!!

ByKalamegam Viswanathan

May 28, 2025


மதுரை மாவட்டம் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலையில் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகே இன்று அதிகாலை 2 மணி அளவில் டிராக்டர் ஒன்று சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு விரைவு பேருந்துஎதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதி மோதிய வேகத்தில் டிராக்டர் மேல் ஏறி நின்றது.

இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.சம்பவம் கண்ட அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்து பேருந்து அடியில் சிக்கிய இருவரையும் மீட்டனர்.

காயம் அடைந்தநபரை ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.தொடர்ந்து காயம் அடைந்த நபரிடம் விசாரித்த போது அவருடைய பெயர் பாலமுருகன் (44) எனவும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் எனவும் உடன் வந்த ஓட்டுநர் பெயரை கேட்டபோது மயக்க நிலையில் இருந்ததால் தகவல் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தலையில் பலத்த காயமடைந்த பாலமுருகனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தஓட்டுனர் குறித்த விவரம் தெரியாததால் இறந்தவர் யார்?என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.