• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி…

BySeenu

Apr 27, 2024

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் – ஆட்சியர் குடியிருப்பு அருகே வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கோவையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்கள் வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த காரில் மோதி விபத்துக்குள்ளானதில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹிஜாஸ் இவரும் இவரது நண்பரும் நள்ளிரவில் அவர்களது இருசக்கர வாகனத்தில் ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ரேஸ்கோர்ஸ் ஆட்சியர் குடியிருப்பு அருகே இருந்த வேகத்தடையில் கட்டுப்பட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் நின்று இருந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னாடி அமர்ந்திருந்த ஹிஜாஸ் என்ற இளைஞர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு இளைஞரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.