• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம்: முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ராஜலட்சுமி சிறப்புரை…

ByKalamegam Viswanathan

Sep 30, 2024

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் எம். வி. கருப்பையா மாணிக்கம் தமிழரசன் நீதிபதி எஸ். எஸ். சரவணன் மகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன்,அரியூர் ராதாகிருஷ்ணன் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் பாசறை மாவட்ட இணை செயலாளர் மு.கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி, நிர்வாகிகள் விவசாய அணி வாவிடமருதூர் குமார், கோட்டைமேடு பாலா, தென்கரை நாகமணி, குருவித்துறை வனிதா, காசிநாதன் மற்றும் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.