குமரி திமுக கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் பாபு தலைமையில் கொட்டாரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானம். கன்னியாகுமரியில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு மண்டபத்திற்கு பின்னால் கரையை தொட்டு கடல் வரை பரந்து விரிந்து உள்ள பாறையில் கலைஞர் கருணாநிதியின் சிலையை அமைக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் மேடையில் இருந்த விருந்தினர்கள், எதிரே இருந்த பார்வையாளர்கள் என அனைவரும் கை ஒலி எழுப்பி வரவேற்றார்கள். கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தில்லை செல்வம் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தாமரை பாரதி தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, மாநில முன்னாள் தொண்டரணி துணைஅமைப்பாளர் பால. ஜனாதிபதி, மகளிரணி ஜெனஸ் மைக்கேல் இளைஞரணி பொன். ஜாண்சன், பேரூராட்சி தலைவர்கள் குமரி ஸ்டீபன், அன்பரசி, கார்த்திகா ஆகியோர் பங்கேற்றனர்.


நிகழ்வில் பேசிய சுவாமி தோப்பு அய்யா வழி குருவும், வழக்கறிஞருமான பால. ஜனதிபதி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் 6_சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தம்பி விஜய் வசந்த் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகளை வாங்கி பாஜக, அதிமுகவை அனைத்து தொகுதிகளிலும் பின்னுக்கு தள்ளியுள்ளார். இதை போன்று தமிழகத்தில் உள்ள 39, தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெரும் என்பதே. கன்னியாகுமரி மக்களவை கொடுத்துள்ள வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். குமரி முதல், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வரையிலான வெற்றி தமிழகத்தின் கடை கோடி தென்னகத்தில் இருந்து தொடங்கவுள்ளது என தெரிவித்தார்.


நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான நாகர்கோவில் மகேஷ் அவரது பேச்சில், தமிழக முதல்வர் தலைவர் முத்துவேல் ஸ்டாலின் ஆட்சியில் மகளிருக்கான இலவச பேரூந்து வசதி, மகளிர் உரிமை தொகை, மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை இவற்றை மூன்றையும் கூட்டி கணக்கிட்டால், தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.36 ஆயிரம் உதவி தொகையாக கிடைக்கிறது. இந்த உதவி தொகையை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாளைய தமிழகம் சின்னவர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும். மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் கொடுத்துள்ளேன். மனுவில் நிரப்ப படவேண்டிய காளங்கள் முறையாக இல்லாத மனுக்களை மீண்டும் சரிபார்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

தகுதி உடைய அனைத்து மகளிருக்கும உரிமை தொகை கிடைக்க குமரி கிழக்கு மாவட்டம் முழுவதும் நான் முயற்சி எடுத்து வருவது போன்று அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பகுதியில் செயலாளர் தம்பி பாபு தொடர்ந்து முயன்று வருகிறார். 2026-சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணி 324-தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் அண்ணன் முத்துவேல் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய நாம் ஒன்று கூடி உழைப்போம் என தெரிவித்தார்.

