• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

ரேஷன் அரிசி கடத்தல் கண்டு கொள்ளாத அதிகாரிகள்..,

ByKalamegam Viswanathan

Nov 29, 2025

மதுரை மாடக்குளம் பகுதியில் பசுமலை கூட்டுறவு சங்க ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாடக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தும் வீடியோ ஆனது இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகிறது.

மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக வேனில் கடத்தும் வீடியோ இணையத்தில் அதிக அளவு வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள பசுமலை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் ரேஷன் அரிசி கடத்தியது வீடியோவானது அப்பொழுது இணையத்தில் பெரும் வைரலானது. ஆனால் தற்பொழுது ரேஷன் அரிசியை கடத்தும் நபரும் அப்பொழுது ரேஷன் அரிசியை கடத்து நபரும் ஒரே நபர் என சம்பந்தப்பட்டவர்கள் விசாரித்த பொழுது தகவல் தெரிவித்தார்கள் காவல்துறை அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.

இதுபோன்று மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசியை கடத்தல் காரர்களுக்கு கடத்தும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையாக ரேஷன் அரிசி கிடைக்க நடவடிக்கை வேண்டும் என்பதை அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.