• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி முகக்கவசம் அணிவது கட்டாயம் : கவர்னர் உத்தரவு

கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.இரண்டாம் அலை பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் உருமாறிய கொரோனா மக்களிடையே பீதியை கிளப்பிச் சென்றது.

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து நியூயார்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு தொழிலாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அவர்கள் கொரோனா தடுப்பூசி முழுவதுமாக செலுத்தியிருக்க வேண்டும் எனவும் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்று பல்வேறு நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.